யாழ் நூலக எரிப்பு: சபையில் மன்னிப்புக் கோரிய பிரதமர்!

1981ம் ஆண்டு ஐக்கி தேசியக் கட்சி ஆட்சியின் போது யாழ். நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
நேற்றைய தினம் இடம்பெற்ற வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது இது குறித்து கருத்துரைத்த பிரதமர், இதன் போது கூச்சலிட்ட கூட்டு எதிர்க்கட்சியினர் தமது ஆட்சியின் போது இடம்பெற்ற தவறுகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
யாழ் மண்ணின் சொத்தாகக் கருத்தப்பட்ட நூலக எரிப்பின் போது விலைமதிக்கமுடியாத நூல்கள் முற்றாக அழிக்கப்பட்டிருந்தமை நினைவுகூறத்தக்கது.