சிறைக்குள் ‘மாபியாக்களுக்கு’ சொகுசு வாழ்க்கை: ஹிருனிகா! முள்ளிநியூஸ்

சிறைக்குள் ‘மாபியாக்களுக்கு’ சொகுசு வாழ்க்கை: ஹிருனிகா!



சிறைச்சாலைக்குள் வாழும் மாபியாக்கள் அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்வதாக இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார் ஹிருனிகா பிரேமசந்திர.

ஆளுமையுள்ளவர்களுக்கு அங்கு விசேட வசதிகள் செய்து தரப்படுவதாகவும் தெரிவித்துள்ள அவர், நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் அனைத்தையும் மறந்துவிட்டதாகவும் தெரிவித்து வரும் துமிந்த சில்வா கடந்த 3ம் திகதி சிறைச்சாலைக்குள்ளேயே தனது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடியிருப்பதாகவம் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது தந்தையைக் கொன்றவர் என்பதற்காகவன்றி, இவ்வாறுதான் சிறைச்சாலைகளின் நிலைமை இருக்கிறது என்பதையே தான் சுட்டிக்காட்டியுள்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW