பேஸ்புக்கில் ஆள் தெரியாமல் காதலா? இதைப்படிங்க முதல்ல. முள்ளிநியூஸ்

பேஸ்புக்கில் ஆள் தெரியாமல் காதலா? இதைப்படிங்க முதல்ல.



இணையத்தள காதல் என்ற பெயரில் அரங்கேறும் ஏமாற்றங்கள்

- அஷ்ரப் அலி பரீத் -

கொழும்பில் வாழும் வர்த்தகர் ஒருவருக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமான இந்திய சகோதரி ஒருவர், பேஸ்புக் வழியாகவே அவராகவே விரும்பி இவரைக் காதலித்துள்ளார். இருவரும் அடிக்கடி உரையாடி, புகைப்படங்களும் பரிமாறிக் கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் அப்பெண்ணின் வீட்டில் திருமணத்துக்கு வற்புறுத்துவதாகவும், அதன் காரணமாகதான் வீட்டை விட்டு வெளியேறி வந்து குறித்த இலங்கை வர்த்தகரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.

குறித்த வர்த்தகர் இந்தியா வருவது தாமதமாகும் என்பதால் தான் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விடுதியொன்றில் தங்க முடியும். ஆனாலும் தன்னை பெற்றோர் கண்டுபிடித்து இழுத்துச் சென்று விடுவார்கள் என்றும் அழுதுள்ளார்.

எனவே தன்னை இலங்கைக்கு வரவைக்க ஏற்பாடு செய்யுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பி, குறித்த வர்த்தகர் அவரது நண்பர்களின் உதவியுடன் அந்த பெண் இலங்கை வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அவர், தான் ஒரு இரட்டையர் என்றும், தன்னோடு இரட்டையராக பிறந்த சகோதரரும் தன் கூடவே இலங்கை வருவதாகவும் திடீரென்று சொல்லி இருக்கிறார்.

அவர் வந்து மூன்று மாதங்கள் அளவில் இந்த பெண்ணுடன் தங்கியிருக்க விரும்புவதாகவும், அவரே இவர்கள் இருவருக்கும் (இந்திய பெண்ணுக்கும் - இலங்கை வார்த்தகருக்கும்) திருமண ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் அந்த பெண் கூறி உள்ளார்.

எனவே சகோதரருக்கும் தனக்கும் தங்குவதற்கும் வீடு கூட ஏற்பாடு செய்யுமாறும், மூன்று மாதங்களின் பின்னரே திருமணம் என்றும் கண்டிசன் போட்டிருந்தார். எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிந்த நிலையில், காதலித்த பெண்ணை திருமணம் முடிக்கும் கனவில் இருந்தவருக்கு ...

சில இந்திய நண்பர்கள் வழியாக கிடைத்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

குறித்த பெண் கோயம்புத்தூரில் ஒரு வாலிபரைக் காதலிப்பதாகவும், இவருடைய காதலுக்கு ஏதோ ஒரு காரணத்தினால் வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதோடு அவரது பெற்றோர் தன் காதலனுக்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்று அச்சம் கொண்டுள்ளார்.

அதற்குப் பயந்து காதலரை மறந்தது போன்று நடித்து, கொஞ்ச காலம் அமைதியாக இருந்துள்ளார்.

அக்காலப்பகுதியில் பேஸ்புக்கில் குறித்த இலங்கை வர்த்தகர் அறிமுகமாக அவர் வசதியானவர் என்று அறிந்து கொண்டு, அவரை காதலிப்பதாக பொய் கூறி, தனக்கும் தன் காதலருக்கும் வீசா, டிக்கட் வாங்கிக் கொண்டுள்ளார்.

இருவரும் இலங்கை வந்தவுடன் உடன்பிறந்தவர்கள் என்ற பேரில் ஒரே வீட்டில் தங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்து கொண்டுள்ளார்கள்.

இந்த விபரம் இந்திய நண்பர்கள் வழியாக தெரிய வந்தவுடன், இங்கே அந்த பெண்ணை காதலித்து ஏமாந்த வர்த்தகர் அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டு விட்டார்.

அந்தளவுக்கு இவர் அந்த பெண்ணை காதலித்திருந்தார். ஆனால் அவரோ பக்காவாக ஏமாற்றிவிட்டார். கடைசியில் மொத்தமாக ஒன்றரை இலட்சம் அளவில் கை நஷ்டம். அது போதாதற்கு இப்போது அந்த வர்த்தகர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை. அவரது மருத்துவ செலவுக்கும் ஏராளம் செலவழிந்து கொண்டிருக்கின்றது.

இருந்தும் குறித்த வர்த்தகர் தான் ஹார்ட் அட்டாக்கில் இருக்கும் நிலையிலும், தான் காதலித்த பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க உதவுமாறும், அவர்களுக்காக ஏற்பாடு செய்த வீட்டில் அவர்களைக் கொண்டு போய் தங்க வைத்து விட்டு வருமாறும் நண்பர்களிடம் கெஞ்சிக் கேட்டு சம்மதிக்க வைத்துள்ளார். அதன் காரணமாக வேறு வழியின்றி அவர்களை இலங்கையில் தங்க வைத்து பராமரிப்பதற்கு அவனது நண்பர்கள் முன்வந்துள்ளனர். (இது வேறு... )

ஆனால் இந்த ஏமாற்றம் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. தான் காதலித்தவனுடன் சேர்ந்து வாழ்வதற்காக இன்னொருவரை அநியாயமாக ஏமாற்றி, அவனுக்கு பெரும் செலவு வைத்து, இங்கு வந்து மூன்று மாதங்கள் மட்டில் அந்தக் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து விட்டு, அதை வைத்து தன் பேரண்ட்ஸ் ஐ சம்மதிக்க வைத்த பின்னர் நாடு திரும்பும் அந்த பெண்ணின் பக்கா பிளான் அவரைப் பொறுத்தவரை சரியாக இருந்தாலும்,

அவரை உண்மையாக காதலித்த ஆணுக்கு பெரும் அநியாயம். .
இதற்குப் பதில் உண்மையில் அவர் உண்மையை சொல்லி உதவி கேட்டிருந்தால், மனப்பூர்வமாக உதவி செய்திருக்கலாம்.

இப்படி ஒருவரின் வாழ்வில் அநியாயமாக விளையாடி இருக்க வேண்டி வந்திருக்காது. இன்னொருவரை ஏமாற்றி தன் காதலனுடன் சேர்ந்து வாழ அவர் போட்ட ஏமாற்று பிளானுக்கு என்றைக்காவது அவர் தண்டனை அனுபவிக்க வரும். அப்போது மனம் வருந்துவார்.

இது போன்று ஏராளம் பேர் இணையத்தள காதல் தொடர்புகளைப் பயன்படுத்தி பலரை ஏமாற்றி தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டுள்ளார்கள். அதன் மூலம் பலர் வஞ்சிக்கப்படவும், ஏமாற்றப்படவும் செய்கின்றார்கள்.

ஒரு வகையில் இது ஒரு பெரும்பாவம் என்பதுடன், நம்மிடம் நல்ல முகத்தைக் காட்டிக் கொண்டும், உயிருக்குயிராக நெருங்கிப் பழகுவது போன்று காட்டிக் கொண்டும் இருக்கும் சிலர் தங்கள் தேவைகளுக்காக சுயநலமிகளாக இருக்கின்றார்கள் .

எனவே இதுபோன்ற சுயநலமிகளை இனம் கண்டு கொண்டு மற்றவர்களுக்கு உதவுங்கள். ஏனெனில் இவ்வாறானவர்கள் காரணமாக உண்மையாகவே உதவி தேவைப்படும் ஏனையவர்களும் பாதிக்கப்படலாம்.

ஆண்களிலும் இது போன்று பெண்களின் வாழ்வில் விளையாடும் சிலர் இருக்கின்றனர்.

நேற்றைய தினம் இந்தியாவில் நடைபெற்ற சம்பவம் ( கீழுள்ள பார்க்க படம் ) அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW