2 மோட்டர் சைக்கிள்கள் மருக்கு நேர் மோதியதில் இளைஞன் - யுவதி மற்றும் இராணுவ வீரர் ஒருவரும் பலி. முள்ளிநியூஸ்

2 மோட்டர் சைக்கிள்கள் மருக்கு நேர் மோதியதில் இளைஞன் - யுவதி மற்றும் இராணுவ வீரர் ஒருவரும் பலி.



மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் மற்றுமொருவரும் பலியாகியுள்ளனர்.

அத்துருகிரிய, தியபெதும - பகமுன வீதியின் 10வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவரும் இளம்யுவதி ஒருவரும் இராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அரங்கலயில் இருந்து மாலபே நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் எதிர் திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாலபே நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் அமர்ந்து பயணித்த யுவதியும் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரும், பிபில, கனுல்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி ஒருவருமே 29 வயது இராணுவ வீரருமே உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை தலங்கம பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW