கொழும்பில் ‘சீன’ பாதாள உலக பேர்வழி? முள்ளிநியூஸ்

கொழும்பில் ‘சீன’ பாதாள உலக பேர்வழி?



கொழும்பில் கசினோ ஒன்றில் பணியாற்றி வந்த சீன பாதாள உலக பேர்வழி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் மனைவி சீன அரச உளவாளியாகப் பணியாற்றுகின்ற அதேவேளை குறித்த நபர் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற நபர் எனவும் விசா முடிவுற்றுள்ள நிலையிலும் கசினோ ஒன்றில் பணியாற்றி வந்ததுடன் உள்ளூர் பாதாள உலகத்தினரோடு தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை சீனாவுக்குத் திருப்பியனுப்புவதற்கான முயற்சிகளும் இடம்பெறுவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றமையும் உள்நாட்டில் முக்கிய நபர் யாரும் குறி வைக்கப்பட்டிருக்கிறார்களா என விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW