கட்டாருக்கு அனுப்பப்படவிருந்த ஹெரோயின் பறிமுதல்

கட்டாருக்கு அனுப்புவதற்குத் தயாராக இருந்த ரூ 1.5 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் தும்மலசூரியவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொட்டஹேன, ஜம்பட்டா வீதியிலிருந்து தும்மலசூரியவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதே பொலிசாரின் நடவடிக்கை மூலம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் பயணித்த வாகனமும் பொலிஸ் வசப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.