ஞானசார தேரருக்கு குற்றப்புலனாய்வு பிரிவில் சற்றுமுன் விசாரனை
பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் இன்று காலை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இத் தொடர்பில் மடவளை நியுஸ் அவ்வமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவியபோது அவ்வமைப்பின் அல்லாஹ் வை அவமதித்து கருத்து வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஞானசார தேரரை நாம் தொடர்பு கொண்ட போது அவர் தான் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குவதாகவும் சற்று நேரத்தில் கதைப்பதாகவும் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.