புதிய அரசியல் யாப்பில் கட்சி தாவும் அரசியல்வாதிகளுக்கு ஆப்பு. முள்ளிநியூஸ்

புதிய அரசியல் யாப்பில் கட்சி தாவும் அரசியல்வாதிகளுக்கு ஆப்பு.



கட்சி தாவுவதை தடை செய்யும் சட்ட மூலமும் புதிய உத்தேச அரசியல் யாப்பில் உள்ளடங்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு கட்சியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவு செய்யப்படும் ஒருவர், பின்னர், அக்கட்சியிலிருந்து பிரிதொரு கட்சிக்கு மாறினால், அவரது உறுப்புரிமை பரிபோனதாக கருதப்படும்.

குறித்த உறுப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதிக்கு இடைக்காலத் தேர்தல் ஒன்றும் நடாத்தப்படும். இதில், குறித்த நபரையோ அல்லது வேறு ஒருவரையோ மீண்டும் தெரிவு செய்யலாம்.

தேர்தல் முறைமையை மாற்றும் விடயத்துடன் சேர்த்து இந்த கட்சி மாறும் விடயம் தொடர்பிலும் தற்பொழுது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அரசியலமைப்புச் சபை உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்துக்கோ, மாகாண சபைக்கு தேர்தல் ஒன்றின் மூலம் மக்களினால் ஒரு கட்சிசார்பாக தெரிவு செய்யப்படும் ஒருவர், தேர்தல் முடிவுற்று தெரிவானதும், வேறு ஒரு கட்சிக்கு மாறுவதானது அக்கட்சிக்கு வாக்களித்தவர்களை ஏமாற்றும் ஒரு அம்சமாகும் எனவும் சபை உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். D C

நண்பர்களுடன் பகிர:
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW