எந்தத் தேர்தலுக்கும் முகங்கொடுக்கத் தயார்: ரணில் முள்ளிநியூஸ்

எந்தத் தேர்தலுக்கும் முகங்கொடுக்கத் தயார்: ரணில்



எந்த தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் அதன் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க.

வியாழனன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர், அரசியலமைப்பை மாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் அதேவேளை அபிப்பிராய வாக்கெடுப்பொன்றை எதிர்கொள்ளவும் கட்சி தயார் நிலையிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW