வவுனியாவில் சிலை உடைப்பு. முள்ளிநியூஸ்

வவுனியாவில் சிலை உடைப்பு.



வவுனியா, ஜோசப்வாஸ் வீதியில் உள்ள அந்தோனியார் சிலை நேற்று இரவு விசமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா, ஹொறவப்பொத்தானை வீதியில் இறம்பைக்குளம் ஜோசப் வாஸ் வீதி அமைந்துள்ளது. இந்த வீதியின் ஆரம்ப இடத்தில் பிரதான வீதிக்கு அண்மித்ததாக அந்தோனியர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இதுவே இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மத முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW