புல்மோட்டை பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டும் அரிசிமலை பிக்கு பணாமுற திளக்க வன்ச என்பவர் யார் முள்ளிநியூஸ்

புல்மோட்டை பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டும் அரிசிமலை பிக்கு பணாமுற திளக்க வன்ச என்பவர் யார்



( இஹ்ஸானா- பரீத் )
(புல்மோட்டை பிரதேசத்திற்கு கடந்த நவம்பர் 27 வருகை தந்த படங்கள் )

புல்மோட்டை பிரதேசத்தில் கடந்த 2010 ம் ஆண்டு காலப்பகுதியில் புல்மோட்டை அரிசிமலை பௌத்த தியான மண்டபத்திற்கு திட்டமிட்டு ஹம்பாந்தோட்டை பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட பணாமுற திளக்க வன்ச என்னும் பௌத்த பிக்கு அதனை பௌத்த கோவிலாக மாற்றி பின்னர் அரிசிமலை பகுதியை சூழவுள்ள பகுதியை பௌத்த விகாரைக்காக்கான நிலமாக சுமார் அரிசிமலை பொன்மலைக்குடா வெற்றிலைக்கேணி வீரன் தீவு போன்ற முஸ்லிம்களுக்கு சொந்தமான 500 ஏக்கர் காணியினை புனித பூமியாக்க திருகோணமலையின் முன்னாள் அரசாங்க அதிபர் சில்வா மஹிந்தவின் அனுசரணையுடன் புல்மோட்டையின் ஏனைய பகுதிகளான 14 ம் கட்டை பம்ப் ஹவுஸ்,சாத்தனமடு,ஆண்டான்குளம் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கி சுமார் புல்மோட்டை பிரதேசத்தில் 2500 ஏக்கர் காணி புனித பூமிக்காக அளவிட முற்பட்டபோது

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தலைமையில் பகுச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தௌபீக் புல்மோட்டை பெரிய பள்ளிவாசலின் தலைவர் கலீல் லெப்பை,ஐனியப்பில்லை,ஐயூப்கன் மௌலவி போன்றோர் புல்மோட்டை மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மூலம் பல தடைவை காணி அளவீடுகள் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் குறித்த நபர்கள் பல தடைவை நீதிமன்றுக்கு திட்டமிட்டு நிறுத்தப்பட்டு அளவீடுகள் இடை நிறுத்தப்பட்டன

மேலும் அரிசிமலை பகுதியில் 2004 ம் ஆண்டு காலப்பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மூவருக்கு நிஹார்ப் நிறுவனத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட
03 வீடுகள் கடற்படையினரால் ஆஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் குறித்த காலப்பகுதியில் காலித் என்பவரின் வீட்டினை உடைத்து பௌத்த கோவிலுக்காக மேலதிக கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் மாகாண சபை உறுப்பினர் அன்வரால் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மீட்கப்பட்டு காலித் குடி அமர்ந்த நிலையில் அவர் இல்லாத சமயம் வீட்டின் ஓடுகள் கழட்டப்பட்டு
> கட்டிடங்கள் உடைக்கப்பட்ட நிலையில் புல்மோட்டை பொலிஸில் காலித் என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டு தோல்வியுற்ற நிலையில்

கொழும்பில் இருந்து சிங்க லே,ராவண பலய போன்ற இனவாத கும்பல்களை பௌத்த பிக்குகளோடு வரவழைத்து மிக மோசமாக நடந்துகொண்டவர் அரிசிமலை பௌத்த பிக்கு பின்னர் மிகுதி இரண்டு வீடும் படையினரிடமிருந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் விடுவித்து கொடுத்த நிலையில் தோல்வியுற்ற பௌத்த பிக்கு பணமுற திளக்க வன்ச அரிசிமலை பகுதியை கை விட்டு விட்டு தற் பொழுது 14 ம் கட்டை பகுதியை நோக்கி 13,14 ம் கட்டை பகுதியில் வெளி மாகாணங்களில் இருந்து சட்ட விரோதமாக குடியமர்த்தி நிலையில் அவற்றுக்கும் குச்சவெளி பிரதேச செயலாளரால் நீதி மன்றுக்கு கொடுக்கப்பட்டு சட்ட ரீதியாக வெளி ஏற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் அதிலும் தோல்வி கண்ட பணாமுற இனவாத கும்பல்களில் ஒன்றான மஹா சேனா பலாக்காய என்ற கூட்டத்தோடு தொடர்பை ஏற்படுத்தி புல்மோட்டை பிரதேசத்திற்கு கொண்டு வந்து இனவாதம் பேசிய வீடியோக்களை முகநூலினூடாக வெளியிட்ட கும்பல்களின் ஒருவனான அமித் வீரசிங்க என்பவனின் முகநூலினூடாக காணக்கூடியதாக இருந்தது

குறித்த வீடியோவில் முஸ்லிம்களின் புல்மோட்டை முஸ்லிம்களின் உடை நடை கலாச்சாரம் என்பன சவூதி அரேபியாவை ஒத்தவை அதிகமான பள்ளிவாசல்கள் காணப்படுவதாகவும் முஸ்லிம்களின் கடைகளுக்கு சிங்களவர்கள் போகக்கூடாது என்றும் கடந்த நவம்பர் மாதம் 27 ம் திகதி புல்மோட்டை சட்ட விரோத சிங்கள பெரும்பான்மை மக்கள் குடி அமர்ந்துள்ள பகுதியில் சினைகள்வர்களுக்காக புதிய கடைகளுக்கு அடிக்கல் நாட்டப்படும் எனவே சிங்க இளைஞ்சர்கள் ஒன்று படவேண்டும் எனவும் முகநூலில் பதிவை இட்டதன் பின்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் முதல் அமைச்சர் ஊடாக கிழக்கு மாகாண பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்ததுடன் திருகோணமலை மாவட்ட பொலிஸ் மா அதிபர் புல்மோட்டை போலிஸ் அதிகாரி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் போன்றோருக்கு வீடியோ மற்றும் போட்டோக்கள் அனுப்பப்பட்டு புல்மோட்டை பிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது

பின்னர் குறித்த அரிசிமலை பௌத்த பிக்குவின் தலைமையில் மஹா சேனா பலாக்காய கும்பல்கள் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு சட்ட விரோத குடியேற்ற காரர்களுக்கு சில பொருட்கள் வழங்கியதுடன் 50 கடைகளுக்கு சட்ட விரோத அனுமதியற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வை அனுமதிக்க கூடாது என்று அரசாங்க அதிபர் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியதுடன் அதிலும் தோல்வியுற்ற பணாமுற 13 ம் கட்ட பகுதியிலுள்ள பௌத்த கோவில் பகுதியில் அடிக்கல் ஒன்றை நாட்டி புறப்பட்டு சென்றனர்

எனவே புல்மோட்டை பிரதேசத்தில் பெரும்பாண்மை மக்களை குடியமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு அலையும் அரிசிமலை பௌத்த பிக்கு தன்னுடைய நடவடிக்கைக்கு இனவாத கும்பல்களை இணைத்துக்கொண்டு செயல் பட்டு வருகிறார்

மேலும் புல்மோட்டை பிரதேசத்தில் எதிர்காலத்தில் முஸ்லீம் மற்றும் அண்மை கிராமமான பதவி ஸ்ரீ புற சிங்கள மக்களோடு உள்ள உறவை சீர்குலைக்க எடுக்கும் முயற்சி பிரதேச மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்று வைத்துள்ளது அத்தோடு புல்மோட்டை பிரதேச மக்கள் சிங்க மக்களின் காணிகளை அடாவடியாக பிடித்திருப்பதாகவும் வதந்திகளை பரப்புவதுடன்
ஹம்பாந்தோட்டை பகுதியில் இருந்து வந்து இரு சமூகங்களையும் பிரிக்கின்ற முழு முயற்சியில் மஹிந்தவின் முகவராக செயற்படுவது புலனாகிறது

மேலும் புல்மோட்டை பிரதேசத்தை அண்டிய ஏனைய பௌத்த விகாரைகளிலுள்ள பௌத்த துறவிகள் மிகவும் நெருக்கமாக புல்மோட்டை முஸ்லிமகளோடு உறவை வைக்கும்போது மஹிந்தவின் நிகழ்ச்சி நிரலில் நிழலாக இயங்கும் அரிசிமலை பௌத்த பிக்கு பணாமுற திளக்க வன்சவின் நடவடிக்கைக்கு நல்லாட்சி நடவடிக்கை எடுக்குமா என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW