கிழக்கையும் தெற்கையும் ‘பிரித்து’ விட்டார்கள்: வெலிகந்தயில் BBS ! முள்ளிநியூஸ்

கிழக்கையும் தெற்கையும் ‘பிரித்து’ விட்டார்கள்: வெலிகந்தயில் BBS !



பௌத்த துறவிகளுக்கும், சிங்கள மக்களுக்கும் கிழக்கு மாகாணத்திற்கு செல்ல முடியாது என அரசாங்கம் தடுத்திருப்பதானது கிழக்கும் – தெற்கும் பிரிந்து விட்டது என்பதை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்துள்ளது பொது பல சேனா.



குறித்த அமைப்பினரால் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு ஆதரவாக இன்றைய தினம் மட்டக்களப்பு நோக்கி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி வெலிகந்தை பிரதேசத்தில் கிழக்கு மாகாண டி.ஐ.ஜியினால் பெறப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவின் அடிப்படையில் தடுக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் அங்கு தரித்து நிற்கும் கடும்போக்குவாதிகள் தமக்கு நடந்து செல்லவும் அனுமதி வழங்கப்படவில்லையெனவும் தெற்கிலும் மேற்கிலும் ஏனைய மதத்தவர்கள் வாழ முடியுமாக இருந்தால் தமக்கு மட்டக்களப்பு செல்லவும் அனுமதி வேண்டுமென கோரி வருகின்றமையும் பொலிசார் அனுமதி மறுத்துள்ளதோடு அங்கு கலகத் தடுப்பு பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW