மட்டக்களப்பு: சுமனரத்ன தேரர் வீதியில் இறங்கி போராட்டம் (video)
தமக்கு ஆதரவாக வந்த பேரணி வெலிகந்தையில் தடுக்கப்பட்டுள்ள நிலையில் பௌத்த துறவிகளுக்கு மட்டக்களப்பில் நடமாட முடியாதா என கேள்வி கேட்டு தமது ஆதரவாளர்களுடன் அங்குள்ள வீதிகளில் சுமனரத்ன தேரர் எதிர்ப்பு நடைபவனியில் ஈடுபட்டுள்ளார்.
இதன் போது சர்ச்சைகள் எழுவதைத் தடுக்க அவருடன் பொலிசார் பயணிக்கின்ற அதேவேளை, அவரது ஆதரவாளர்கள் வெறுப்பூட்டும் வகையிலான கோசங்களை எழுப்பி பொலிசாருடன் முறுகலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தாம் மட்டக்களப்பு செல்ல அனுமதிக்கும் வரை நகரப் போவதில்லையென பொதுபல சேனா ஏற்பாட்டில் வந்த பேரணி வெலிகந்தையில் தரித்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியைப் பகிர்க