சிறப்பு அமைச்சர் என்ற சட்ட மூலத்தை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும்- மஹிந்த ராஜபக்ஷ

வெட்கமுள்ள அரசாங்கமாக இருந்தால், சிறப்பு அமைச்சர் என்ற சட்ட மூலத்தை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல, அரசாங்கத்தையே விட்டு விட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிறப்பு அமைச்சர் ஒருவரை நியமிப்பது தொடர்பிலான சட்ட மூலம் மாகாண சபைகளில் பரவலாக தோல்வி கண்டு வருவது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவியதற்கே இவ்வாறு பதிலளித்தார்.
ஆர்ப்பாட்டம் செய்ததற்காக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மாகாண சபை உறுப்பினர்கள் இருவரை சுகம் விசாரிக்க சிறைச்சாலைக்குச் சென்றுவிட்டு திரும்புகையில், ஊடகங்களின் கேள்விகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ விளக்கமளித்தார்.
ஒரு நாட்டில் சாதாரணமாக தமது கருத்துக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை இருத்தல் வேண்டும். அதனை முடக்க முற்பட்டால், விளைவு மோசமானதாக மாறும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அரசாங்கம் போகின்ற போக்கைப் பார்க்கும் போது, புது வருடம் மிகவும் கஷ்டமான ஒரு வருடமாக இருக்கும் எனவும் அவர் ஹேஷ்யம் கூறினார். D C