சுனாமி வீடுகள் பகிர்ந்தளிப்பு தொடர்ந்தும் இழுத்தடிப்பு முள்ளிநியூஸ்

சுனாமி வீடுகள் பகிர்ந்தளிப்பு தொடர்ந்தும் இழுத்தடிப்பு


இம்மாதம் 31ம் திகதிக்கு முன்பதாக பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டம் தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் தொடர்ந்தும் இழுத்தடிப்பு இடம்பெறுவதாக அறியமுடிகிறது.

கடந்த 8 வருடங்களுக்கு முன் சவுதி அரேபிய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளை மூவின மக்களுக்கும் விகிதாசார அடிப்படையில் இம்மாத இறுதிக்குள் கையளிக்கப் போவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பீ.வணிகசிங்க அறிவித்திருந்தார்.

எனினும், இதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரை இடம்பெறவில்லையென அறியமுடிகிறது. பேரியல் அஷ்ரப் முயற்சியில் இவ்வீட்டுத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW