செங்கோலைத் தொட்டால் இரு மாதங்கள் ‘இடைநிறுத்தம்’ முள்ளிநியூஸ்

செங்கோலைத் தொட்டால் இரு மாதங்கள் ‘இடைநிறுத்தம்’


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக் கோவை உருவாக்கப்பட்டு நெறிமுறைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில மாகாண சபைகளில் இடம்பெற்றதைப் போன்று செங்கோலைத் தொட்டால் இரு மாதங்கள் குறித்த உறுப்பினரை இடைநிறுத்தம் செய்யும் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

இரு வருட ஆலோசனையின் பின் நேற்று முன் தினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் விரைவில் அமுலுக்கு வரவுள்ள அதேவேளை இலத்திரனியல் வாக்களிப்பு மற்றும் பிரதமரிடமான கேள்வி நேர முறைமையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW