திருகோணமலையில் நகைகளைத் திருடிய நபர் விளக்கமறியலில் முள்ளிநியூஸ்

திருகோணமலையில் நகைகளைத் திருடிய நபர் விளக்கமறியலில்



திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 92000 ம் ரூபாய் பெறுமதியான நகைகளைத் திருடிய பம்புறுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.அப்துல் முகீத் இன்று திங்கட்கிழமை(12) உத்தரவிட்டார்.

சந்தேகநபர் தனது மாமியின் 92,000ம் ரூபாய் பெருமதியான தங்க நகைகளை திருடியுள்ளதாக கோமரங்கடவெல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய குறித்த சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (11) மாலையில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (12) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW