கடற் கொந்தளிப்பினால் மூதூர் கரையோர மக்கள் பாதிப்பு (Photo)
தற்போது திருகோணமலை கடற் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் 11.12.2016ம் திகதி மாலை முதல் மூதூர் கரையோர பகுதியாகிய ஹபீப் நகர்இ தக்வா நகர் மற்றும் பஹ்ரியா நகர் ஆகிய பகுதிகளினுல் கடல் நீர் மட்டத்தின் அளவு கூடியதினாலும் கடல் அலைகளின் வேகம் அதிகரிப்பினாலும் மக்களின் வீடுகளுக்குள் நீர் உட்புகும் நிலையினை அவதானிக்க முடிகின்றது.
இதனால் 80க்கும் அதிகமான குடும்மங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25க்கும் அதிகமான மீன் மற்றும் கருவாட்டு வாடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஹபீப் நகர் மற்றும் தக்வா நகர் பிரதான பாதை சேதமடைந்து வருகின்றமையினால் போக்குவரத்தும் தடைப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் காணப்படுகின்றனர்.
இவ் மண்ணரிப்பு ஒவ்வொரு வருடமும் தொடர்வதினால் பல ஏக்கர் காணிகள் நீர் சூழ்வதாகவும் இதனை தடுப்பதற்கு பல முயற்சிகள் எடுத்தும் எதுவிதமான பலனையும் காணமுடியாது இருப்பதாக கிராம வாசிகள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் இன்று ஏற்பட்டுள்ள நிலமையினை அரசியல் வாதிகளும் அதுபோன்று முக்கிய பிரமுகர்களும் நேரடியாக சென்று நிலமையினை அவதானித்தனர்.

(இஹ்ஸானா- பரீத்)