ஞானசார கைதுக்கு ‘நான்’ தடையில்லை: ஜனாதிபதி! முள்ளிநியூஸ்

ஞானசார கைதுக்கு ‘நான்’ தடையில்லை: ஜனாதிபதி!




ஞானசாரவைக் காப்பாற்றும் எதுவித நடவடிக்கையையும் தான் ஒரு போதும் செய்யவில்லையென தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதிக்கிடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது ஞானசார கைது செய்யப்படாதிருப்பது ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே என பேச்சு நிலவுவதாக அங்கு சுட்டிக்காட்டதற்கு பதிலளித்தே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கடிதம் ஒப்படைத்துள்ள போதிலும் நேரடி சந்திப்பில் ஐவர் கலந்து கொள்ளாத அதேவேளை இச்சந்திப்பில் வைத்து இன-பேதமற்ற நடவடிக்கை எடுக்க சட்ட-ஒழுங்கு அமைச்சருக்குத் தான் நேரடியாக உத்தரவிடுவதாகவும் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW