சென்னையில் வர்தா புயல்; இரு உயிர்கள் பலி
சென்னையைத் தாக்கிய வர்தா புயலினால் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டதுடன், கட்டிங்களுக்கும் சேதங்களை உருவாக்கிய வர்தா புயல் தற்போது சற்று தணிந்து வருகின்ற நிலையில் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் தற்காலிக முகங்கள் அமைத்து மீட்புப் பணிகளும் இடம்பெறுகின்றன.

சுமார் 9000 பேரளவில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அதேவேளை இன்றிரவுக்குள் மின்சார விநியோகம் சீர் செய்யப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளதுடன் மீட்புப் பணிகளில் இராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

