சமூக வலைத்தளங்கள் மீது அரசுக்கு ஒரு ‘கண்’!
வானொலி, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளிவரும் விடயங்களை அவசியம் எனின் நெறிப்படுத்த முடியும் எனினும் சமூக வலைத்தளங்களில் இந்தக் கட்டுப்பாடு இல்லாதமை குறித்து அரசாங்கம் கவனமெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
மீலாத் விழாவை முன்னிட்டு குருத்தலாவயில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள பிரதமர், தற்போது இது குறித்து அரசு தரப்பிலிருந்து விளக்கங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் எல்லை மீறிய நிலை வந்தால் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டங்களை உருவாக்கவும் அரசு தயங்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.