மைத்ரியோடு இணைந்து இயங்குவதில் ‘ஆர்வம்’: கோத்தா தூது!
(இஹ்ஸானா- பரீத்)
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து இயங்குவது தனக்கு மிகவும் சுலபமானது என தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிளவைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முக்கியஸ்தர் ஒருவரிடமே இவ்வாறு தெரிவித்துள்ள அவருக்கு சுதந்திரக் கட்சியில் முக்கிய பதவியொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. மஹிந்த ராஜபக்ச பிரிவிலிருந்து ஆளுமையுள்ள ஒருவரை சு.க உயர் பதவியில் இணைத்துக்கொள்ள கட்சி உயர் மட்டம் இணங்கியுள்ள போதிலும் அதற்கான தகுதிவாய்ந்த ஒருவர் தொடர்பில் இணக்கம் காண்பதில் இழுபறி நிலவுவதாக கட்சி முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
சாமல் ராஜபக்ச தொடர்பில் நல்லெண்ணம் இருக்கின்ற போதிலும் கோத்தபாயவின் ஆளுமை தொடர்பில் சு.க தரப்பிலும் ஆர்வம் இருக்கின்ற நிலையிலேயே இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.