இலங்கையில் பூரண மத சுதந்திரம் மலர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார் : ஜனாதிபதி முள்ளிநியூஸ்

இலங்கையில் பூரண மத சுதந்திரம் மலர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார் : ஜனாதிபதி




தாம் விரும்பும் மதத்தைத் தெரிவு செய்து கொள்ளும் பூரண மத சுதந்திரத்தை இலங்கையர்கள் அனுபவிக்கும் காலம் மலர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி.

ரத்தொலுகம மெதடிஸ் தேவலாய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நேற்றைய இன்றைய தினம் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ள அதேவேளை இலங்கையெங்கும் முறையான திட்டங்களுடன் இயங்கும் 450க்கும் அதிகமான கிறிஸ்தவ அமைப்புகளை பௌத்த மதத்தை அழித்து வருவதாகவும் முஸ்லிம்கள் மத மாற்றம் மூலம் பௌத்த பாரம்பரியத்தை இல்லாதொழித்து வருவதாகவும் நேற்றைய தினம் புனானையில் வைத்து பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் செயலாளர் ஞானசார தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோபுள்ளே மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கிறிஸ்தவ மதத் தலைவர்களின் குழந்தைகளுக்கு பாடசாலை அனுமதி பெறுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் கவனமெடுத்து விரைவில் தீர்வைத் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW