யாழில் மாணவர்கள் மீது இனந்தெரியாதோர் வாள் வெட்டு.

யாழ்ப்பாணம் ஊரெழு பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் நின்ற இரு மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் வாள் வெட்டினை மேற்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
நேற்று (21) புதன்கிழமை இரவு 9 மணியளவில் தனியார் கல்வி நிலைய விளம்பரங்களை ஒட்டி கொண்டிருந்த நிலையில் இவ்விரு மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிச் சென்ற இனந்தெரியாத இரு நபர்கள் மாணவர்கள் மீது வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுச் தப்பி சென்றுள்ளனர்.
இதில் இரண்டு மாணவர்களும் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.