பரீட்சை மண்டபத்தில் மாணவர்களின் அவலம் - பெற்றோர் புகார்-

திருகோணமலை மாவட்டத்தில் இன்று க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் இம் மாவட்டத்தில் இம்முறை பரீட்சை எழுதும் மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகியுள்ளதாக பரீட்சார்திகளின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இம் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாவது:-
இம்முறை பரீட்சை எழுதும் பெரிய மாணவிகளுக்கு சிறிய மேசைகளும், கதிரைகளும் வழங்கப் பட்டுள்ளதாகவும் இதனால் இம் மாணவிகள் பெரும் சிரமத்தை எதிர் கொண்டிருப்பதாகவும்,
மற்றது முஸ்லிம் மாணவிகள் ஸ்காப் அணிந்துள்ளதை கழட்டி மடியில் வைத்து பரீட்சை எழுதுமாறு பணிக்கப் பட்டுள்ளனர் .
இதனால் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு இம் மாணவிகள் பரீட்சை எழுதி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
Editor:-
mullinews