முள்ளிப்பொத்தானை சிங்க பாடசாலைக்கு க.பொ.சாதாரண தர பரீட்சை எழுத வந்த முஸ்லீம் மாணவர்கள் பரீட்சை எழுத மறுப்பு-அன்வர் மா.ச.உறுப்பினர்

திருகோணமலை மாவட்டத்தில் முள்ளிப்பொத்தானை பகுதியில் க.பொத. சாதாரண தர பரீட்சை எழுத வந்த முஸ்லிம் மாணவர்களும், மாணவிகளும் பெரும்பாண்மை இன மேற்பார்வையாளர்களால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
இன்று 06 நாடு பூராக க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம் மாணவர்களை பரீட்சை எழுத விடாமல் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த பரீட்சை மேற்பார்வையாளர்கள் முஸ்லிம் மாணவ மாணவிகளிடம் முஸ்லிம்களின் பர்தா ஹிஜாப் போன்றவற்றையும், முஸ்லிம் மாணவர்களிடம் அவர்களின் தாடியையும் அகற்றவேண்டும் என கடும் விவாதத்திற்கு மத்தியில் பரீட்சை எழுதிய நிலையில் மீண்டும் நாளை வரும்போது முழுவதும் அகற்றப்பட்டு வந்தால் மாத்திரமே பரீட்சை நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுக்கப் பட்டுள்ளனர்.
இது குறித்த பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து கிழக்கு மாகாண முதல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹம்மத் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அசங்க மாகாண கல்வி பணிப்பாளர் நிஸாம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
அதனையடுத்து விசேடமாக நாளை குறித்த முள்ளிப்பொத்தானை சிங்க மகா வித்தியாலயத்தில் இடம்பெறும் பரீட்சை நிலையத்திற்கு மாகாண பணிப்பாளர் நிஜாம் மற்றும் கந்தளாய் வலைய கல்வி பணிப்பாளர் அடங்கிய விசேட குழுவினர் உரிய பரீட்சை நிலையத்திற்கு உடன் அனுப்பி வைக்கப்பட்டனர் விசேட குழு அனுப்பி
நாளை முதல் அவை சுமூகமாக இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண பணிப்பாளர் நிஸாம் தெரிவித்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்
(இஹ்ஸானா- பரீத்)