அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்குப் பிணை
மட்டக்களப்பு நகரில் கடந்த 3ம் திகதி சட்டவிரோத ஊர்வலம் மற்றும் இனவாத பதட்டத்தை உருவாக்கிய மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராக மட்டக்களப்பு பொலிசார் தொடுத்த வழக்கில் தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தினம் பொது பல சேனா தலைமையில் அங்கு செல்ல முயன்று வெலிகந்தையில் தடுக்கப்பட்ட வேளையில் பள்ளிவாசல்களைத் தாக்க வேண்டும் என இனவாதம் பேசிய சிங்ஹலே மற்றும் மகசோன் பலகாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இன்று தேரருக்கு ஆதரவாக மட்டக்களப்பு சென்றிருந்தனர்.
இந்நிலையில், தேரர் 50,000 ரொக்கம் மற்றும் இரு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆயினும், ஒரு காலத்தில் மட்டக்களப்பில் சிங்கள மக்கள் நிறைந்து வாழ்ந்ததாகவும் குறிப்பாக ஏறாவூர் பாடசாலையொன்றில் மாத்திரம் 1500 சிங்கள மாணவர்கள் கல்வி கற்றதாகவும் தெரிவித்த அவரது சட்டத்தரணி தற்போது சிங்களவர்களுக்கு அங்கு வாழ்வதற்கான சூழ்நிலையில்லாதிருப்பதனாலேயே பௌத்தர்களின் உரிமைக்காக தேரர் போராடுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.