புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட உடைகள், கையுறைகள் மீட்பு முள்ளிநியூஸ்

புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட உடைகள், கையுறைகள் மீட்பு


கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் பிரிவில் இருந்து புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட உடைகள் மற்றும் கையுறைகள் ஒருதொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஏப்ரன் (aprons) எனப்படும் சமையல் செய்பவர்கள் பயன்படுத்தும் உடை மற்றும் கையுறைகள் அடங்கிய 904 பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பொருட்கள் இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதோடு, இலங்கை ஊடாக இவை ஸ்லோவேனியாவுக்கு அனுப்பப்படவிருந்ததாக, சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இது குறித்து இந்திய சுங்கப் பிரிவினருக்கு அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW