அலெப்போ; சமகால பேரவலத்தின் அத்தாட்சி!
பூகம்பம், பூமியர்ச்சி;, சூறாவளி, புயல்காற்று, மண்சரிவு, வரட்சி;, வெள்ளப்பெருக்கு, கடற்கோள் என காலத்திற்குக் காலம், ஏற்படுகின்ற இயற்கை அழிவுகளினால் உலகளவில் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டு மடிந்துபோகின்றனர். அவ்வாறுதான், உலக மகா யுத்தங்கள், சிவில் யுத்தங்கள், உள்நாட்டு போர்கள் என மனித செயற்பாடுகளினால் இடம்பெற்ற அழிவுகளினால் பல இலட்சக்;கணக்கானோரின் உயிர்கள் பறியெடுக்கப்பட்டிருக்கின்றன.
இவ்யுகத்தில் உலகளாவிய ரீதியிலும் நம் தேசத்திலும்; ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட இனத்துவ வேறுபாடுகள், சமூக, பொருளாதரா, அரசியல், போட்டா போட்டிகள,; முரண்பாடுகள் போன்றன நாடுகளுக்கிடையிலும், நாடுகளுக்குள்ளும், குழுக்களுக்கிடையிலும் போர்ச் சூழலை உருவாக்கி அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
இலங்கையிலும், இன மேலாண்மை அல்லது இன அடக்குமுறைகள் உள்நாட்டுப் போராக உருவெடுத்து ஆயிரக்காணக்கானோரை காவுகொண்டிருக்கிறது. பேரவலங்களை உருவாக்கியிருக்கிறது. இலங்கiயின் உள்நாட்டுப் போர் நிறைவடைந்த முள்ளிவாய்கால் மனித பேரவலத்தின் வரலாற்றுப்பதிவாக இத்தேசத்தின் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
உலக வரலாற்றில் மக்கள் விரும்பாத ஆட்சியாளர்களுக்கெதிராக காலத்திற்குக் காலம் மக்கள் எழுச்சி நடந்திருக்கிறது. அவை ஒரு சில நாடுகளில் வெற்றிகொள்ளப்பட்டும் சில நாடுகளில் கிளந்தெழுந்த மக்கள் படைப்பலம் கொண்டு ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் அவர்களது எழுச்சி தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. வெற்றி தோல்வி கண்ட இம்மக்கள் எழுச்சியின் பின்னணியில் பல்வேறு காரணிகளும் சக்திகளும் செயற்பட்டிருக்கின்றன. அவ்வாறானதொரு மக்கள் எழுச்சிக்கு வித்திட்டதுதான் அரபிய வசந்தமாகும்.
அரபு வசந்தமும் பின்னணியும்
மத்திய கிழக்கின் துனுசியா, எகிப்து, லிபியா, யமன், சிரியா, பஹ்ரைன், குவைட், லெபனான், ஓமான், மொறோக்கோ, ஜோர்த்தான் போன்ற அரபு நாடுகளில் 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் உருவெடுத்த ‘அரபு வசந்தம்’ என்ற மக்கள் எழுச்சி, மாற்றங்களையும், உள்நாட்டு மோதல்களையும், பேரழிவுகளையும் அந்நாடுகளில் ஏற்படுத்தியிருக்கிறது.
துனுசியா அரசின் தவறான கொள்கையினால் அந்நாட்டில் பல இளைஞர்கள் பாதிக்கப்பட்டனர். இப்பாதிப்பின் வெளிப்பாட்டின் ஒரு அங்கமாவே தெருவோரத்தில் சிரிய மரக்கறிக் கடை வைத்திருந்த 26 வயதுடைய முகம்மது பௌசி என்ற இளைஞனுக்கு அவன் வாழ்ந்த துனுசியாக நாட்டின் பிராந்திய ஆளுனரினால் ஏற்படுத்தப்பட்ட அவமானம், அவனை அவனாகவே தீயிட்டு கருகச் செய்யத் தூண்டியது. இந்நிகழ்வே அரபு வசந்தத்திற்கு வித்திட்டது.
2010 டிசம்பர் மாதம் 17ஆம் திகதி முகம்மது பௌசி தனக்குக் தானே தீயிட்டு 2011 ஜனவரி 4ஆம் திகதி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி செயின் அல் ஆப்டின் பின் அலிக்கு எதிரான மக்கள் எழுச்சி வீறுகொண்டெழுந்தது. அவரைப் பதவி துறக்கவும்; செய்தது.
அரபு உலகில் எழுந்த அரபு வசந்தத்தின் பின்னணயில் அந்நாடுகளில் காணப்பட்ட நிர்வாகப் பயங்கரவாதம், ஜனநாயக் கட்டமைப்பின் தாக்கம், சக்திவள நெருக்கடி, இலஞ்ச, ஊழல், மனித உரிமை மீறல்கள், பணவீக்கம், விலைவாசி அதிகரிப்பு, பிராந்தியப் பாகுபாடு, தொழில்வாய்ப்பின்மை, இஸ்லாமியக் கொள்கை பிரிவுகள் போன்றவை அந்நாடுகளின் அரசுகளுக்கு எதிராக மக்களை கிளந்தெழச் செய்ததுடன் இவ்வெழுச்சிகளினூடாக அந்நாடுகளில் ஜனநாயம், சுதந்திரமான தேர்தல்கள், பொருளாதார சுதந்திரம், மனித உரிமை, தொழில் வாய்ப்பு போன்றவற்றை கட்டியெழுப்புவதற்கான ஆட்சி மாற்றத்தை நோக்கி அவ்வெழுச்சிகள் முன்னகர்த்தப்பட்டன.
இந்த இலக்குகளை இந்நாடுகளில் அடைந்துகொள்வதற்காக பல்வேறு எதிர்ப்பு யுக்திகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றை ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு புறம் சர்வதேச ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் உளவியல் ரீதியான ஊக்கத்தை அளித்து வந்தன. மறுபுறம் இஸ்லாமிய வாதத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு ஒற்றுமைகள் சீர்குழைக்கப்பட்டு ஏக இறை கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் ஷியா, சுன்னி என்ற இரு இஸ்லாமிய இன அடையாளப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு மறைமுக உதவிகளும் வழங்கப்பட்டு உள்ளு}ர் மேதல்கள் ஊக்குவிக்கப்பட்டன. அவை தொடரச் செய்யப்பட்டன.
அரபு வசந்தத்தின் ஆரம்பம் அரசுகளுக்கெதிரான மக்கள் எழுச்சியாக உருவானபோதிலும். பின்னரான வருடங்களில் அவை இஸ்லாமிய கொள்கை அடிப்படையில் தூபமிடப்பட்டு உள்நாட்டுப்போர்களாக மாற்றப்பட்டது. இதன் பின்புலத்தில் இஸ்லாத்தின் விரோதிகள் செயற்பட்டனர்.
இந்த உள்நாட்டுப்போர் ஈராக், லிபியா உள்ளிட்ட நாடுகளையும், நவீன சிரியாவின் வரலாற்று முக்கியத்துவமிக்க மிகப் பெரிய நகரான அலெப்போவையும் முற்றாக அழித்துள்ளதுடன் பல இலட்சக்கணக்கான மக்களையும் பல கோடி பெறுமதியான சொத்துக்களையும் சின்னாபின்னமாக்கி, மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளதுடன்; மனிதநேயத்தையும் மரணிக்கச் செய்து அழிவுகளால் எழுதப்பட்ட சமகால பேரவலத்தின் அத்தாட்சியாக நம்முன் சிரியாவின் அலெப்போவைக் காட்சியளிக்கச் செய்திருக்கிறது.
அலெப்போவும் அழிவுகளும்
மேற்கில் லெபனானையும், தெற்கில் இஸ்ரேலையும், ஜோர்த்தானையும், கிழக்கில் ஈராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்ட நாடு சிரியா. இச்சிரியாவில் இஸ்லாத்தின் ஆட்சி மிக நீணட காலமாக நிலவியது. இருப்பினும், இஸ்லாமிய ஆட்சி வீழ்த்தப்பட்டு மேற்குலகின் ஆட்சிக்கு சிரியா மாறி, 1936ஆம் ஆண்டு பிரான்சிடமிருந்து மக்கள் ஆனைக்கேற்ப சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டது. இவ்வாறு மேற்குலகின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற சுதந்திர நவீன சிரயாவின்; தற்போதைய மக்கள் தொகை 22.5 மில்லியனாகும்.
சிரியாவின் மக்கள் தொகையில் ஏக இறைக் கொள்கையைக் கொண்ட மக்களான முஸ்லிம்கள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனடிப்படையில் சிரியாவில் பெரும்பான்மையினராக அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்கள் வாழ்கின்றனர். 16 வீதத்தினரே ஷீயா கொள்கை உட்பட ஏனைய கொள்கைப் பிரிவினர்களாகும். 10 வீதம் கிறிஸ்தவர்களும் உள்ளனர். 1963 இலிருந்து பசாட் கட்சியே நாட்டை ஆட்சி செய்து வருவதுடன். 1970 முதல் சிரியாவை அஸாத் குடும்பமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
2000ஆம் ஆண்டு முதல் ஷீயா கொள்கை கொண்ட, ஷீயா கொள்கையை வளர்ப்பதற்காக, சுன்னி முஸ்லிம்களுக்கு எதிராக ஆட்சி; செய்து வரும் ; தலைவர் பஷர்; அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள்; 2011ஆம் ஆண்டு அரபு வசந்தத்தின் ஓர் அங்கமாக தலைதூக்கியது. 16 வருடமாக ஆட்சிய செய்யும் பஷர் அல் அசாத்தை ஆட்சி கவிழ்ப்பதற்காக மக்கள் புரட்சி தொடங்கிய 2011ஆம் வருடம் முதல் அலெப்போ நகர் அசாத்தின் கொடூ படைகளின் பிடிக்குள்; அகப்படும் சமகாலம் காலம் வரை சிரியாவில் 250 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஐ.நாவின் அறிக்கையின் பிரகாரம் கொல்லப்பட்டவர்களில்; அதிகளவிலானோர் அசாத்தின் கொடூர அரச படைகளினால் அநியாயமாகக் கொள்ளப்பட்டவர்களாவர். அது தவிர, இதுவரை 11 மில்லியன் சிரிய மக்கள் அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 7 மில்லியன் பேர் தாய்நாட்டுக்குள்ளும் 4 மில்லியன் பேர் நாடுகள் கடந்தும் பல்வேறு மனிதாபிமான நெருக்கடிகளுக்குள் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு அசாத்;தின் அரச படைகளினால் 65ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் இவர்களில் பலர்; காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று குறிப்பிட்டிருக்கிறது.
ஆட்சி மாற்றத்துக்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியானது சுன்னி ஷியா இனத்தவர் என மாற்றப்பட்டு உள்நாட்டுப் போராக வெடித்ததனால் ஏறக்குறைய கி.மு.10000 ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்ட சிரியாவின் வரலாற்றுத்தடங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. நாங்கு வருடங்களாக கொள்கையை வெற்றிகொள்வதற்காக தன்நாட்டு மக்களுக்கு எதிராக யுத்த தர்மங்களையும் மீறி, போர்குற்றங்கள் புரிந்தவாறு மேற்கொள்ளப்படும்; கொடூர யுத்தத்தின் பிடிக்குள் சிக்கிய பராம்பரி வரலாற்று முக்கியத்துவமிக்க 2.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட அலொப்போ நகர் அடையாளம் தெரியாமலேயே அழிக்கப்பட்டுவிட்டது.
கடந்த நான்கு வருடங்களிலும் பார்க்க கடந்த ஜுலை மாதம் முதல் அலோப்போ மீது தொடுக்கப்பட்ட கோர யுத்தமானது குழந்தைகள், சிறுவர்கள். பெண்கள், முதியவர்கள் என்ற மனிதப்படுகொலைகளின் பின்னர் இறுதியாக கடந்த வாரம் அலெப்போ நகரம் வெற்றிகொள்ளப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதர்ம அரசுக்கு வெற்றியாக அமைந்தாலும் பாரிய பேரவலத்தின் வரலாற்றை உலக்கு அலெப்போ பதிவாக்கியிருக்கிறது.
இருப்பினும், இன்னுமே மனிதாபிமானமும், மனிதநோயமும,; மனித உரிமைகளும் அந்த மண்ணில் புதைக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பெண்களின் மானம் பறிக்கப்படுவதனால் தாங்களாவே தற்கொலை செய்துகொள்வதற்காக யுவதிகள் தங்களது பெற்றோர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் அல்லது காம வெறிபிடித்தவர்களின் கரங்களிலிருந்து தங்களது பெண் பிள்ளைகளைக் காப்பாற்றிக்கொள்ள தாங்களாகவே தங்களது பிள்ளைகளை கொன்று விடுவதற்கு பெற்றோர்கள் அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆலொப்போவை விட்டு வெளியேறியும,; வெளியேற முடியாமலும் அம்மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். மேற்குலகின் மனிதாபிமானக் குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தாலும் அவை எந்தளவுக்கு சக்தி பெறும் என்பதை திட்டமாகக் கூறமுடியாதுள்ளது. ஏனெனில், உலக வல்லரசுகள் அஸாத்தின் கையை ஓங்கச் செய்திருக்கின்றன. மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவியிருக்கின்றன. உள்நாட்டு யுத்தத்தை இரு இஸ்லாமியக் கொள்கைப் பிரிவுக்கான யுத்தமாக மாற்றி அழிவுகளை எச்சமாக விட்டிருக்கிறது. இதனால் அழிந்தது ஏக இறைகொள்கையை ஏற்றவர்களும் அவர்களின் எதிர்காலமும்தான்;.
புள்ளிவிபரங்களின் பிரகாhரம் 4 இலட்சம் பேர் இந்த நான்கு வருட போரினால் காயப்பட்டிருக்கிறார்கள். இதனால் பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனமாக்கப்பட்டுள்ளனர். பாலகர்களும் பச்சிலம் சிறார்களும் எதிர்காலத்தை இழந்துகொண்டிருக்கிறர்ககள். சிரியாவில் இயங்கும் வன்முறைத் தகவல் நிலையத்தின் தரவுகளின் பிரகாரம் யுத்தத்தினால் இறந்தவர்களில் 73 வீதமானோர் ஆண்களாகவும் 12.2 வீதமானோர் சிறுவர்களாகவும் உள்ளனர்
அலொப்போவின் சிரித்திர பிரசித்திபெற்ற பள்ளிவாசல் உட்பட 97 வீதமான கட்டடங்கள் குண்டு மழையினால் அழிக்கப்பட்டிருப்பதாக சர்வ தேச தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில்; மனிதாபிமான உதவி வேண்டிய அலொப்பொ மக்கள் கைகளை ஏந்தி நிற்கின்றனர். உயிர்பிச்சையை வேண்டி நிற்கின்றனர். அலெப்போ மக்களின் பேரவலம் மனிதாபிமானமுள்ள மக்களை கண்ணீரால் குளிப்பாட்டிக்கொண்டிருக்கையில், ‘100 வருட சந்தத்திகளைக் கொண்டும’ 4 ஆயிரம் வருட சரித்திர சான்றுகளைக் கொண்டும் ; கட்டியெழுப்பப்பட்டிருந்த அலெப்போ 4 வருடத்திற்குள் அனைத்தையும் இழந்து ஒரு சந்ததியினரையே கண்ணீர் சிந்த வைத்துவிட்டது’ என சிரியாவுக்கான ஐ நா அமைப்பின் பிரதிநிதி ஜன் எகிலன்ட் குறிப்பிட்டிருப்பதிலிருந்து அலொப்போவின் பேரவலத்தை மேலும் விபரிக்க வேண்டியது அவசியமில்லை என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.
பொருளாதாரத்தாலும் சனத்தொகையினாலும் சரிக்குச் சமன் என்று இல்லாவிட்டாலும், உலகளில் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்டு வாழும் ஏக இறை நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் ஏன் இத்தனை அழிவுகளையும் சோதனைகளையும் சந்திக்கிறார்கள். அல்லது அழிவுகள் இவர்களை நோக்கி திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்படுகிறது என்று சிந்திப்பது அவசியமாகவுள்ளது.
700 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த உலகில் 160 கோடி மக்கள்; முஸ்லிம்களாவர்;. இருப்பினும், முஸ்லிம் நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழும் நாடுகளிலுமே சமகாலத்தில் பிரச்சினைகளும் உள்நாட்டுப் போர்களும், குண்டு வெடிப்புக்களும் வன்முறைகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இஸ்லாத்தின் எதிரிகளும் திட்டங்களும்
இந்த மோலதல்களும் அழிவுகளும் தானாக இடம்பெறுகின்றனவா அல்லது மாற்று சக்திகளினால் உருவாக்கப்படுகி;ன்றனவா என்பது தொடர்பில் முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பற்றுள்ளாகள்;. இஸ்லாத்தினதும் இஸ்லாமியர்களினதும் வளர்ச்சியினை சகித்துக்கொள்ள முடியாத இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் அழிக்கும் பல்வேறு திட்டங்களை அரசியல், சமூக, பொருளாதார, உளவியல் என பல தளங்களில் நின்றும் வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
22 வயது யூத இளைஞன் முஸ்லிம்களை விழித்து கூறிய வார்த்தைகள் பல சமூக வலைத்தளங்களில் பதிவாகியிருந்தது. அதில் ‘ ஷீயாக்களின் பள்ளியொன்றை வெடிக்கச் செய்து சுன்னிகள் மீது பழியைப் போட்டோம். சுன்னிகளி;ன் பள்ளியொன்றை வெடிக்கச் செய்து ஷீயாக்கள்தான் செய்தார்கள் என்றோம். இரு தரப்பினரும் சண்டையிட்டுக்கொண்டனர்.
உங்களின் முதல்தர எதிரி ஷீயா என்று சுன்னிகளிடமும் சுன்னிகள்தான் உங்களது முதல்தர எதிரி என்று ஷீயாக்களிடமும் கூறி இரு சமூகத்தினரையும் சண்டையிடச் செய்து இரு சமூகத்தினதும் தலைமுறையினரை அழித்தோம்.
எமது செய்மதிகளை உங்களது வீடுகளை நோக்கி திருப்பினோம். நீங்கள் பேசும் அனைத்து மொழிகளிலும் உங்களுக்கு ஆபாச நிகழ்ச்சிகளை உருவாக்கி தொழுகை நேரங்களில் அவற்றை ஒளிபரப்பினோம். இதன் மூலம் உங்களின் இஸ்லாமியப் பற்றை அளித்தோம். இறுக்கமான மெல்லிய ஆடைகளை உங்களின் சந்தைகளில் நிறைத்தோம். வாலிப ஆண் பெண் மத்தியில் சோசலிய உரையாடல், நகையாடல் கலாசாரத்தை உருவாக்கி அவர்களின் ஈமானியப் பற்றை அழித்தோம்.
உங்களின் பல்கலைக்கழகங்களில் பிரச்சினைகளை உருவாக்கி அடிக்கடி மூடவைத்து மாணவர்கள் மாணவிகளை காதலிக்கும் இடமாக அவற்றை மாற்றிவிட்டோம். புதிய பிரிவு ஒன்றை உருவாக்கி அதனை பலப்படுத்தி அதற்கு ஆயுதம் வழங்கி உங்களைக் கொள்ளுமாறு வேண்டினோம். நீங்கள் உறக்கத்தில்தான் இருக்கின்றீர்கள். நீங்கள் விழித்துக்கொண்டு எங்களை நோக்கி படையெடுக்காமலிருக்க சில சமூக நிகழ்ச்சி நிரல்களுக்குள் உங்களைப் பராக்காக்கி விட்டோம்’ என முஸ்லிம்களுக்கு எதிரான இவைபோன்ற பல்வேறு விடயங்களை கூறியிருக்கும் அந்த இளைஞன், ‘ஏய் தலைநிமிர்ந்து வாழும் யூத சமூகமே! ஒரு துப்பாக்கி கூட எம்மை நோக்கி வராது. ஏனெனில் முஸ்லிம்கள் தமக்குள்ளே யுத்தத் தீயை மூட்டிக்கொண்டார்கள்’. என்று குறிப்பிட்டிருப்பதாக சமூக வலைத்தளங்கள் பதிவேற்றிருக்கிறது
இவை எந்தளவுக்கு உண்மைத்தன்மையானது என்ற விசாரனைகளுக்கு அப்பால் உலகளவில் முஸ்லிம்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குழைப்பதற்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை, வளர்ச்சி மற்றும் பொருளாதார விருத்தி என்பவற்றை அழிப்பதற்கான சதி;த்திட்டங்கள் இந்த வடிவத்தில்தான் இஸ்லாத்தின் எதிரிகளினால் வடிவமைக்கப்பட்டு உலகளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
முஸ்லிம்களை அழிப்பதற்கு எதிரிகள் கையில் எடுத்தக்கொண்ட ஆயுதமே இஸ்லாமியர்களை கொள்கை அடிப்படையில் பிரிப்பதாகும். இவர்களின் இத்திட்டத்தை இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்னர் இறக்கப்பட்ட அல்குர்அன் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஸுரத்துல் அன்பியாவின் 93வது வசனம் இவ்வாறு குறிப்பிடுகிறது. ‘தங்களது (மார்க்கக்) காரியத்தில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் பிளவுபட்டும் விட்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் நம்மிடம் திரும்ப வரக்;கூடியவர்கள்’
இஸ்லாத்தின் எதிரிகளின் திட்டத்திற்கு அரபுலகு மாத்திரமல்ல இலங்கை வாழ் முஸ்லிம்களும் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். காட்டிக்கொடுப்புக்களும், கழுத்தறுப்புக்களும், கொள்கைப் பிரிவுகளும், கட்சி வேறுபாடுகளும் என இந்நாட்டு முஸ்லிம்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இருப்பினும், அரபுலகத்தின் சமகாலப் பேரவலத்தின் அத்தாட்சியாக மாற்றப்பட்டிருக்கும் அலெப்போ மக்களின் அடிப்படைத் தேவை வேண்டிய மனிதாபிமானத்துக்கான குரல்கள் மனிதாபிமானமுள்ளவர்களிடம் சென்றடைவதற்கும், மனிதாபமிமான உதவிகள் இம்மக்களை சென்றடைவதற்கும் முடிந்தளவில் நாம் முயற்சிப்பதோடு அதற்காகவும் அம்மக்களுக்காகவும் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக!