இலங்கை – தஜ்கிஸ்தானிடையே கூட்டுறவு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
தஜ்கிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இலங்கை வந்துள்ள நிலையில் இன்று இரு நாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்தும் பொருட்டு ஐந்து கூட்டுறவு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளது.
சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை உட்பட இரு தரப்பு ராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தும் வகையிலான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. 13 பேர் கொண்ட குழுவுடன் நேற்றைய தினம் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தஜ்கிஸ்தான் ஜனாதிபதி இலங்கை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.