பொதுபலசேனாவை விரட்டியதில் அரசியல் விளையாட்டு!!! முள்ளிநியூஸ்

பொதுபலசேனாவை விரட்டியதில் அரசியல் விளையாட்டு!!!

bbs.jpg2
(இஹ்ஸானா- பரீத்)
பொதுபலசேனா என்ற இனவாத கூட்டம் தங்களுடைய இனவாதக்கருத்தை கிழக்கிலே குறிப்பாக மட்டக்களப்பிலே விதைத்து அதனை அதேகனம் அறுவடை காணும் முகமாக மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி நேற்று புரப்பட்டனர்.

மட்டக்களப்பு செல்ல முடியாது என்ற கோர்ட்டின் தடை உத்தரவு பிரப்பித்திருந்த சந்தர்ப்பதிலும்கூட அதனை மீறி அவர்களுடைய இலக்கை அடைவதற்கான கடும் அராஜகத்தையும் பிராயத்தனத்தையும் மேற்கொண்டிருந்தனர். ஆனாலும் அவர்கள் புனானை வரை தடுத்து நிறுத்தப்பட்டனர் என்ற செய்தி சகலரும் அறிந்ததே.

ஆனால் இன்று பேசப்படும் பொருளாக மாறியிருப்பது “தடுத்து நிறுத்தியவர்கள் நாங்கள்தான்”
என்ற செய்திகளை இவ்வாறான சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கிறது.

அவர்களுடைய அட்டகாசங்களை அடக்கி ஒடுக்கி அட்ரஸ் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
ஆனாலும் அதனை யார் செய்வார்கள்? எந்த அரசியல் தலைவர்களும் செய்தபாடு இல்லையே? என்ற ஏக்கம் சமூகத்திற்கு மத்தியில் இன்று நேற்றல்ல பல வருடங்களாக இருந்து வருகின்றமை மறைக்க மறுக்க முடியாத செய்தியாகும்.

யாராவது இந்த இனவாதக்கும்பலின் அராஜகங்களை அடக்க வேண்டும் என்ற எதிர்பாப்பு பல கட்டங்களை கடந்தும் உச்ச கட்டத்தினை அடைந்தும்கூட யாரும் எந்த நடவடிக்கை எடுத்ததாக காணமுடியவில்லை.

ஆனால் அன்று அவர்களை ஏர்எடுத்துப்பாக்காத அரசியல் தலைவர்களின் நடவடிக்கையின் காரணமாக இன்று இந்தளவுக்கு அவர்கள் வளர்ந்து வடகிழக்கு என்று சென்று இனவாத நச்சுக்களை கக்கிவருகின்றமை எமது அரசியல் தலைவர்களை நாம் இந்த இடத்தில் ஞாபகபடுத்த வேண்டியும் இருக்கின்றது.

எனவேதான் அப்பணியை அன்றிலிருந்து இன்று வரை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் “அவர்களுக்கு நாங்கள்தான் எமன்” என்று அவர்களுக்கு கட்டம் கட்டமாக தக்க பதிலடி கொடுத்தும் அவர்களுக்கு எதிராக பல வழக்கு தாக்கல் செய்தும் தவ்ஹீத் ஜமாஅத்த பல வழக்குகளை சந்தித்தும் சிறைவாசம் சென்றும் இருப்பதனை சமூகம் தெளிவாக அவதானித்துக்கொண்டிருக்கிறது.

இந்த இடத்திலே ஒவ்வொருவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.

நேற்று இடம்பெற்ற சம்பவத்தினை அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்தி இருக்கின்றார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனாலும் அதனை வைத்தும் அரசியல் செய்யப்பார்க்கிறார்கள் என்பதுதான் கடும் வேதனையாக இருக்கிறது.

அல்லாஹ்வை தரக்குறைவாக விமர்சித்த போது…நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்தி பேசிய போது…
குர்ஆனில் பிழை கண்ட போது…
இவர்கள் எங்கே இருந்தார்கள்? அதற்கான ஆக்கபூரவமான தடவடிக்கை என்ன செய்தார்கள்?

ஆனால் நேற்று மட்டக்களப்பு செல்வதை தடுத்தி நிறுத்தி விட்டோம். என்ற விடயத்தில் அரசியல் சாகாசம் கட்ட முனைபவர்களுக்கு யாருக்கும் இடம்கொடுக்க கூடாது என்பதனை
இந்த இடத்தில் சமூகத்திற்கு சொல்லி வைக்கின்ற எனது நற் செய்தியாகும்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW