மூதூர் தொகுதியில் சுதந்திரக் கட்சி கிளைகள் புனரமைப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கிளைகளை புனரமைத்தல் மற்றும் கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளல் அங்கத்தவ அட்டைகள் கையளித்தல் நிகழ்வு இன்று (04) நாடளாவிய ரீதியில் இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தொகுதிக்கான பிரதான நிகழ்வு மூதூர் தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னால் முதலமைச்சருமான நஜீப் ஏ மஜீத் தலைமையில் பிரதான நிகழ்வு கிண்ணியாவில் இடம் பொற்றது.
கட்சியின் தலமைப்பிட பிரதிநிதியும் ஜனாதிபதி இனைப்பாளருமான எம்.எச்.ஸாஹுல் கலந்து கொண்டதுடன். நிகழ்வுக்கு வருகை தந்த சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் மூதூர் தொகுதி மத்திய குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இஹ்ஸானா- பரீத்