தி-குறிஞ்சாக் கேணி மகளிர் வித்தியாலயத்திற்கு இரண்டு மாடி கட்டிடம் அமைக்க கோரிக்கை முள்ளிநியூஸ்

தி-குறிஞ்சாக் கேணி மகளிர் வித்தியாலயத்திற்கு இரண்டு மாடி கட்டிடம் அமைக்க கோரிக்கை


கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள தி/குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலயத்திற்கு இரண்டு மாடிக்கட்டிடம் ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாமிடம் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இக் கோரிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
இவ் வித்தியாலயத்தில் 800 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.

இது உயர்தர வரையான 1சீ பாடசாலை இங்கு வகுப்பறை பிரச்சினை காணப்படுவதாகவும் ,80 வருடம் நிறைந்த பழமையான கட்டிடம் ஒன்றிலேயே தற்போது சில வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் அவை எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய நிலை காணபுபடுவதால் ஆசிரியர்களும், மாணவிகளும் அச்சத்துடனேயே கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆகையால் 80 வருடம் பழைமையான இக் கட்டிடத்தை இடித்து விட்டு அவ்வாடத்தில் தங்களுக்கு புதிய இரண்டு மாடிக் கட்டிடத்தை அமைத்து தந்து இந்த மாணவிகளின் அச்சத்துடன் கல்வி கற்கும் நிலையைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு மாணவிகளின் சார்பில இவ் வித்தியாலய அதிபர் என்னிடம் வேண்டு கோள் ஒற்றை விடுத்துள்ளான்.

எனவே இப்பாடசாலையில் நிலவும் இடப் பிரச்சினையை கருத்தில் கொண்டு இடிந்து விழும் நிலையில் உள்ள 80 வருட பழைமையான அதற்குப் பதிலாக அவ்விடத்தில் இரு மாடி வகுப்பறைக் கட்டிடம் ஒன்றை அமைத்து கொடுப்பதற்கு 2017 ஆம் ஆண்டில் மேற் கொள்ளப்படவுள்ள பாடசாலைக் கட்டிட வேலைத் திட்டத்திற்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு அன்பாக
இக் கோரிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.




(இஹ்ஸானா பரீத் )

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW