தையல் பயிற்சி மாணவர்களுக்காண செயலமர்வு முள்ளிநியூஸ்

தையல் பயிற்சி மாணவர்களுக்காண செயலமர்வு


கிண்ணியா தையல் பயிற்சி பயிலுகின்ற மாணவர்களுக்கான இலவச செயலமர்வு BCM.Campas நடாத்தப்பட்டது
சமூக மற்றும் கல்விக்கான வலையமைப்பு தலைவரும் நைட்டா ( NAITA) பயிற்றுவிப்பாளருமான ஏ.எம்.அக்ரம் மற்றும் ஏ.ஆர்.எம்.றிபாஸ் ஆகியோரினால் சமூக மற்றும் கல்விக்கான வலையமைப்பின் உதவியுடன் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குற்பட்ட தையல் பயிற்சி செய்து கொண்டு இருக்கின்ற மாணவிகளுக்கு சமூக ஊடங்களில் எவ்வாறு புதிய உற்பத்தி பொருட்களை தேடிப்பெறுவது , உற்பத்தி செய்த பொருட்களை எவ்வாறு விற்பனை செய்வது என்பது தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டது

நவீன மயமாக்களுக்கு ஏற்ப எவ்வாறு தங்களின் தொழிலை விருத்தி செய்வது புதிய உற்பத்திகளை வடிவமைப்பது என்பது தொடர்பாகவும் தையல் பயிற்சி மாணவர்களின் தொழிலை விருத்தி செய்யும் நோக்கிகி இச்செலமர்வு நடாத்தப்பட்டது

இச் செயலமர்வில் 30 க்கு மேற்பட்ட தையல் பயிற்சி மாணவர்கள் பங்கு பற்றி பயன் பெற்றுக் கொண்டார்கள்.

இஹ்ஸானா பரீத்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW