உடுவே ஹிமியின் விகாரையில் காலை நேர ‘ஒலிபரப்புக்குத்’ தடை!
உடுவே தம்மாலோக தேரரின் விகாரையிலிருந்து ஒலிபரப்பாகும் பிரித் போதனைகளை காலை 5-6 மணி வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
தினமும் அதிக சத்தத்துடன் இடம்பெறும் இவ் ஒலிபரப்பால் தமக்கு மன உளைச்சல் மற்றும் சூழல் பாதிப்பும் ஏற்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கின் விசாரணைக்கு 16ம் திகதி ஆஜராகுமாறு தேரருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விகாரையிலிருந்து அதிக ‘ஒலி’: தம்மாலோக தேரருக்கு எதிராக வழக்கு!க்கு!