ஆக்கிரமிப்பு நிலத்திலிருந்து வெளியேறும் யூத கிராமம்!
பலஸ்தீன தனியார் காணியை ஆக்கிரமித்து யூதர்களால் உருவாக்கப்பட்டிருந்த அமோனா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேற இணங்கியுள்ளனர்.
குடித்த குடியேற்றம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் குடியிருப்பாளர்களுக்கு மாற்று இடமொன்றை வழங்க அரசாங்கம் முன் வைத்த திட்டத்தை ஏற்றுக்கொண்டே இவ்வாறு அங்கிருந்து வெளியேற இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கிழக்கு ஜெரூசலத்தில் 130 குடியேற்றங்களும் மேற்கு கரையோரத்தில் 97 குடியேற்றக் கிராமங்களும் சட்டவிரோதமானது என இஸ்ரேலுக்கள் குரல் எழுப்பப்பட்டு வருகின்ற அதேவேளை பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்தே இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.