சிரியா: கிளர்ச்சிப் படையினரை உடனடியாக வெளியேற உத்தரவு
கிழக்கு அலெப்போ சிரிய இராணுவத்திடம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் அங்கு நிலை கொண்டிருந்த கிளர்ச்சிப் படையினர், அவர்களது உறவினர்கள் மற்றும் காயமுற்றோர் உட்பட அங்கிருந்து வெளியேற விரும்பும் பொதுமக்களும் வெளியேறும் வகையில் வழங்கப்பட்டிருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எதிர்வரும் செவ்வாய் தினத்துக்கு முன்பதாக அனைத்து கிளர்ச்சியாளர்களும் வெளியேறி விட வேண்டும் என சிரிய இராணுவம் அறிவிப்புகளை மேற்கொண்டு வருகிறது.
செவ்வாயன்று கிழக்கு அலெப்போவின் அனைத்து பகுதிகளுக்குள் இராணுவம் நுழையவுள்ளதாக அறிவிப்பு மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் சில குழுக்கள் தாம் வெளியேறப் போவதில்லையென தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.