"முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற, பதிவுகளை Report செய்துவிடுங்கள்"

தீய சக்திகளுக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் எல்லா சமூகங்களிலும் நல்லவர்கள் பெரும்பான்மையாக இருப்பது தான்.
இஸ்லாம் முஸ்லிம்கள் பற்றிய பீதியை சந்தைப் படுத்துவதன் மூலம் தமது சமூகத்தில் உள்ள பலவீனமான அறியாமையில் உள்ளவர்களை வீதிக்கு கொண்டுவருவது அவர்களது மூலோபாயம்.
சமூக ஊடகங்கள் ஊடாக அவர்கள் மேற்கொள்ளும் பரப்புரைகளுக்கு நாம் போதிய விளம்பரத்தை கொடுப்பது அவர்களது பணியை இலகுவாக்குகிறது.
நாம் உணர்ச்சிவயபட்டு மேற்கொள்கின்ற பதிவுகள் அல்லது பகிர்வுகள் மற்றும் எதிர்வினையாற்றல்கள் மூலம் அவர்கள் தமது தரப்பு ஆளணியை உசுப்பேற்றி திரட்டிக் கொள்கின்றார்கள்.
அவர்கள் காழ்புணர்வுப் பரப்புரைகளை முழுநேர தொழில்துறையாக செய்து கொண்டிருக்கின்றார்கள், எமது எதிர்வினைகள் அவர்களது அறுவடைகள்.
முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற பதிவுகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளாது அவற்றை Report செய்துவிடுங்கள்.
நண்பர்களுடன் பகிர:-