ஆளை விடுங்கள்; ‘கும்பிடு’ போடும் டான் பிரியசாத்! (video) முள்ளிநியூஸ்

ஆளை விடுங்கள்; ‘கும்பிடு’ போடும் டான் பிரியசாத்! (video)


சிறையிலிருந்து பிணையில் விடுதலை பெற்றுள்ள திடீர் ‘இனவாதி’ டான் பிரியசாத் தன்னைச் சுற்றியிருந்தவர்கள் தனக்குத் துரோகமிழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தன்னிடம் 50,000 ரூபா பணத்தையும் பெற்றுவிட்டு நேரத்திற்கு வழக்குக்கு சமூகளிக்கத் தவறிய சட்டத்தரணி, ஜினானந்த எனும் பௌத்த துறவியின் உத்தரவின் பேரிலேயே அவ்வாறு செய்திருப்பதாகவும் அனைவரும் சேர்ந்து தன்னை சிறையிலடைத்து சுகம் கண்டதாகவும் தெரிவித்துள்ள அவர், தனது பெயரில் பௌத்தவாதம், சிங்களவாதம் பேசி தனது புகைப்படத்தைக் காட்டி போலி வேசம் போட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 15ம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்ட டான் பிரியசாத், இடையில் இரு தடவைகள் தான் வெளியே சென்ற பின் தன்னை மாற்றிக்கொள்ளவுள்ளதாகவும் எதுவித சர்ச்சைகளிலும் ஈடுபடப் போவதில்லையும் என தெரிவித்த பிணை கோரியிருந்தார். எனினும், அவ்விரு தடவைகளும் சட்டத்தரணி பணத்தைப் பெற்று விட்டு தாமதாக வந்ததே தன்னை சிறையில் வைக்கும் நோக்கத்தில் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், தான் தனக்குத் தேவையெனின் தனது வழியில் அமைப்பொன்றை உருவாக்கி இயங்கப் போகவதாகவும் ஒரு போதும் சந்தர்ப்பவாத பௌத்தவாதம் பேசுவோருடன் இணையப் போவதில்லையெனவும் கூறி ‘கும்பிடு’ போட்டுள்ளார். தன்னோடு பாவாத மலை வந்த சிங்ஹலே கூட தன்னைப் பார்க்க சிறைச்சாலைக்கு வரவிவ்லையெனவும் தனது மனைவியும், வெளிநாட்டிலிருந்து தனக்கு உதவி செய்த சில நண்பர்களும் தவிர வேறு யாருக்கும் தனது விடுதலையோடு எதுவித தொடர்புமில்லையெனவம் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கருத்து தெரிவித்த ஞானசார, ‘புதிதாக’ இளைஞர்கள் உருவாகி தலைமைத்துவத்துக்குப் போட்டி போடுவதாகவும் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.


நண்பர்களுடன் பகிர:-
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW