பேருந்துகளைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை முள்ளிநியூஸ்

பேருந்துகளைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை



நேற்றைய தினம் தனியார் பேருந்து வேலை நிறுத்தத்தின் போது சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இ.போ.ச பேருந்துகள் மீது தாக்குதல் நடாத்தியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, ஹம்பாந்தோட்ட, திருகோணமலை உட்பட பல இடங்களில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதோடு 26 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டு நான்கு சாரதிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக நேற்று மாலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்போர் மற்றும் பொது மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு பங்கம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் பகிர:-

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW