அமெரிக்க உப ஜனாதிபதியிடமிருந்து மைத்ரிக்கு தொலைபேசி அழைப்பு! முள்ளிநியூஸ்

அமெரிக்க உப ஜனாதிபதியிடமிருந்து மைத்ரிக்கு தொலைபேசி அழைப்பு!


டொனால்ட் ட்ரம்பின் உதவி ஜனாதிபதியாக நியமிக்கப்படவுள்ள மைக் பென்ஸ் – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று முன் தினம் இரவு தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மைக் பென்சிடமிருந்தே இவ்வழைப்பு வந்துள்ள அதேவேளை விரைவில் ட்ரம்ப் – மைத்ரி வொஷிங்டனில் சந்திப்பதற்கான ஏறபாடு செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றியும் ஆராய இணக்கம் காணப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்குதல்களை இல்லாமலாக்க உதவ வேண்டும் என முன்னதாக மைத்ரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 இதனை நண்பர்களுடன் பகிர:-
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW