மூதூர் கடலில் மூழ்கிய 03 சகோதரர்களின் சடலங்கள் கண்டெடுப்பு (Photo) முள்ளிநியூஸ்

மூதூர் கடலில் மூழ்கிய 03 சகோதரர்களின் சடலங்கள் கண்டெடுப்பு (Photo)


திருகோணமலை மூதூர் கடலில் நீராடிக் கொண்டிருந்த 4 இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளதுடன் அவர்களின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று திங்கட்கிழமை பி.ப.12. 30 மணியளவில் இடம் பெற்ற இவ் அனர்த்தத்தில் திஹாரி பகுதியிலிருந்து மூதூர் பகுதிக்கு ஜமாத் வேலை செய்வதற்காக வந்த காதர் ஹஸன் அப்துல்லா (17) ,முஹமட் நௌஸாத் முகாஸா (19) ,முஹமட் றியாஸ் முஹமட் இக்ராம் (20) ஆகிய இளைஞர்கள் ளுஹர் நேர தொழுகையை நிறைவேற்றிவிட்டு கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே கடலில் அடித்துச் செல்லப்பட்டு உயிர் இழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.



(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW