சி.ஐ.டி வந்து விசாரிக்கட்டும்; பதில் தருகிறேன்: மஹிந்த முள்ளிநியூஸ்

சி.ஐ.டி வந்து விசாரிக்கட்டும்; பதில் தருகிறேன்: மஹிந்த


லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வந்து விசாரித்தால் பதில் கொடுக்கத் தயாராகவே உள்ளதாக தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

அண்மையில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, குறித்த கொலையின் பின்னணியில் மஹிந்த மற்றும் கோத்தபாயவே இருப்பதாக பகிரங்கமாக கருத்துரைத்திருந்தார்.

இந்நிலையில், யாருக்காகவும் தான் இதுபற்றிப் பேசத் தயாரில்லையென தெரிவித்துள்ள மஹிந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வந்து விசாரித்தால் பதில் கொடுக்கத் தயாராகவே இருப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW