ஹ’தோட்டை விவகாரம்: சீன தூதரும் ‘அதிருப்தி’ என்கிறார் மஹிந்த முள்ளிநியூஸ்

ஹ’தோட்டை விவகாரம்: சீன தூதரும் ‘அதிருப்தி’ என்கிறார் மஹிந்த


ஹம்பாந்தோட்டை தொழில் பேட்டை தற்போது நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து இலங்கைக்கான சீனத் தூதரிடமும் அதிருப்தி நிலவுவதாக தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.

குறித்த திட்டம் தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் இல்லையெனினும் அவை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது சீனத் தூதரும் சில விடயங்களை எடுத்துரைத்ததாகவும் அவற்றின் அடிப்படையில் அவருக்கும் இது குறித்து சில அதிருப்தி இருப்பதாகவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் சிறு தடைக்குப் பின் தற்போது மைத்ரி அரசிலும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற நிலையில் அவை மஹிந்த தரப்பால் எதிர்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW