திருகோணமலை பிரதான வீதியில் ஆடை வியாபார நிலையம் உடைத்து கொள்ளை . முள்ளிநியூஸ்

திருகோணமலை பிரதான வீதியில் ஆடை வியாபார நிலையம் உடைத்து கொள்ளை .



திருகோணமலை 139/a பிரதான வீதியில் (NDB BANK) இற்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஆடை வியாபார கடை ஒன்று நேற்று இரவு உடைத்து திருடப்பட்டுள்ளது.

கடையின் உரிமையாளர் வியாபாரத்தை முடித்துவிட்டு சென்ற பின்பு நேற்று நள்ளிரவு இனம் தெரியா குழுவினரால் கடையின் பிரதான முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சென்று இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.

44000/= ஆயிரம் பெறுமதியான பணத்தையும பல பெறுமதிமிக்க ஆடை பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர். திருடப்பட்ட பொருட்கள் 4 இலட்சம் பெருமதியானவை என போலீசில் முறைப்பாட்டு செய்ய[பட்டுள்ளது.

தகவல்: நிஸ்வர் முஹம்மட்அமீர் ( கடை உரிமையாளர் )



(இஹ்ஸானா- பரீத்)

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW