ஜெருசலத்துக்குள் அமெரிக்க தூதரகம்: ட்ரம்புக்கு அப்பாஸ் கண்டனம்! முள்ளிநியூஸ்

ஜெருசலத்துக்குள் அமெரிக்க தூதரகம்: ட்ரம்புக்கு அப்பாஸ் கண்டனம்!



இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவில் இயங்கிக்கொண்டிருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலம் ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் கொண்டுவர அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள டொனால் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுவதற்கு பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார் பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்.

கிழக்கு ஜெரூசலத்தைத் தலைநகராகக் கொண்டியங்கவே பலஸ்தீனம் எதிர்பார்த்துள்ள நிலையில் அமெரிக்க தூதரகத்தை அங்கு கொண்டு சென்று பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரித்து ஜெருசலத்தை அபகரிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு அமெரிக்கா தூபமிடுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW