மதீனா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை. முள்ளிநியூஸ்

மதீனா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.


மதீனா தற்கொலை குண்டு தாக்குதலில் மூளையாக செயல்பட்ட இரு பயங்கரவாதிகள் சவூதி பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தயீ சாலிம் யஸ்லம் அல்சயீரி மற்றும் தலால் பின் ஷம்ரான் அல் சயாரி ஆகிய இருவர் மதீனாவில் கடந்த வருடம் ரம்ஜான் மாதத்தில் நடத்தப் பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் மற்றும் ஜித்தாவில் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமையன்று ரியாத்தில் இவ்விருவரும் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்கள் பதுங்கியிருந்த பகுதி பாதுகாப்பு அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் மீது பயங்கரவாதிகள் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது .

தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் சவூதி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW