ட்ரம்ப் பதவியேற்பு: புதிய குடியேற்றங்களை ஆரம்பிக்கிறது இஸ்ரேல் முள்ளிநியூஸ்

ட்ரம்ப் பதவியேற்பு: புதிய குடியேற்றங்களை ஆரம்பிக்கிறது இஸ்ரேல்

சில வாரங்களுக்கு முன்பாகவே புதிய சட்டவிரோத குடியேற்றங்களை நிராகரிப்பது தொடர்பிலான வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டு ந்த இஸ்ரேல் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்ற கையோடு கிழக்கு ஜெரூசலம் பகுதியில் புதிய குடியிருப்புகளை நிர்மாணிக்க தயாராகி வருகிறது.

ஐ.நாவில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற பராக் ஒபாமா நிர்வாகம் அனுமதித்திருந்த நிலையில் தாமதப்படுத்தப்பட்ட குடியேற்ற நடவடிக்கைகளை இனி தொடரப்போவதாக ஜெரூசலம் பிரதி மேயர் தெரிவித்துள்ளார்.

தான் பதவியேற்ற பின் ஐ.நாவின் ‘நிலை’ வேறாக இருக்கும் என ஏலவே ட்ரம்ப் சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW