UNPயுடன் சேர்ந்திருக்கும் வரை சு.கட்சிக்கு எதிர்காலமில்லை: மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்திருக்கும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிர்காலம் ஒன்று ஒன்றில்லையென தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டகன்றாலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ள அவர், மைத்ரிபால சிறிசேன கட்சியின் நலன் குறித்து அக்கறையுள்ளவராக செயற்பட வேண்டும் எனவும் அதை மறந்து செயற்படுவதனால் அவரது தலைமையின் கீழான கட்சியை வலுப்படுத்த யாரும் பங்களிக்கப் போவதில்லையெனவும் நேற்றைய தினம் இடம்பெற்ற சு.க முதலமைச்சர்களுடனான சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.