நீர்த்தேக்கத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

இந்த சடலம் நேற்று (01) மாலை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (02) காலையே நல்லதண்ணி பொலிஸார் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நீர்தேக்க பகுதியில் சடலமொன்று மிதப்பதை அப்பகுதியில் மீன் பிடிக்க சென்றவர்கள் அவதானித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சடலம் மரண விசாரணைகளின் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.